உள்நாட்டு

நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு..!
நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு..!

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 06.07.2026 அன்று புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் முனைவர் ரஷ்மி ரூமி, துணை செயலாளர் மீரான் ஜி மற்றும் உலகத்தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தில் இலங்கைக்கான பிரதம ஆலோசகர் சபை தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோர் இணைந்து இந்த நியமனங்களை வழங்கி வைத்தனர்.

அதே வேளை இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்ன விருது பெற்ற டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் விருதினை உலக தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கலைக்கூடத்தின் சார்பில் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஏனைய இலங்கையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமன கடிதங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமாதான தூதர் ஷேக் அமானி,சந்திரிகா நிரோஷன்.நிதுஷா, ஜாஸ்மின், ஹபீபா, ஷாமீலா, இர்ஷாத்,ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கவிஞர் எழுத்தாளர் ராதா மேத்தா,சிரேஷ்ட அரசியல்வாதி முபாரக் அப்துல் மஜீத், தமிழன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஜவுபர், ஹாஷிம ஓமர் பவுண்டேஷனின் பணிப்பாளர் திருமதி மரியம் ஹாசிம் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வருகை தந்த அதிதிகளுக்கு பொண்ணாடை போற்றி, சந்தன மாலை அணிவித்து புரவலர் ஹாஷிம் ஓமர் கௌரவம் செய்தார்.

கலைக்கூடத்தின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொழிலதிபர் ஷேக் அமானி நினைவு சின்னங்களை வழங்கினார்.

உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் இலங்கைக்கான உத்தியோக பணிகள் இன்று முதல் ஆரம்பமாகுவதாக உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் கலாநிதி ரஷ்மி ரூமி இதன் போது இங்கு குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

photography  farook issam

36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா..!
36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா..!
வெள்ளிவிழா..!
வெள்ளிவிழா..!
கவிதை நூல் வெளியீட்டு விழா..!
கவிதை நூல் வெளியீட்டு விழா..!

வெளிநாட்டு

அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
ஈரானுக்கு ஆதரவளிக்க சீனா மற்றும் ரஷ்யா எடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தேவைப்படும் போதெல்லாம் அந்தத் தலையீடுகளுக்கு எதிராகச் செயற்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க தாக்குதல்களால் ராணுவத்திலிருந்து வீரர்கள் வெளியேறுவதும், அதிகரித்துள்ளது.
ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி அமெரிக்கா சரியாக அறிந்துள்ளதாகவும், அவை அனைத்தையும் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், தேவையான இடங்களில் அவர்களை நேரடியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.
 
புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டிப் பேசிய ஹெக்செத், அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரான் இராணுவத்தின் மன உறுதி சிதைந்துள்ளதாகக் கூறினார். இதன் காரணமாக வீரர்கள் இராணுவத்தை விட்டு வெளியேறுவதும், சிரேஷ்ட தலைவர்கள் மத்தியில் கடும் விரக்தி ஏற்பட்டுள்ளதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
எங்களிடம் தெரிவுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் ஈரானுக்கான தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டவை. கடந்த ஒரு மாதத்திற்குள்ளேயே போருக்கான நிபந்தனைகளை நாங்கள் தீர்மானித்துவிட்டோம். வரும் நாட்கள் மிகவும் முக்கியமானவை, என அவர் தெரிவித்தார்.
 
கடந்த சனிக்கிழமை தாம் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு விஜயம் செய்ததாகவும், அங்கு ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நேரடியாக அவதானித்ததாகவும் ஹெக்செத் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் இளவரசர் அண்ட்ரூ கைது!
முன்னாள் இளவரசர் அண்ட்ரூ கைது!
1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் ..!
1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் ..!
மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு..!
மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு..!

அண்மைச் செய்திகள்

நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு..!

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 06.07.2026 அன்று புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் முனைவர் ரஷ்மி…

36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா..!

36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவுடன் இணைந்து நடைபெற்ற நுவரெலியா அனைத்து இளைஞர் மன்றங்களுக்கான மாவட்ட விளையாட்டு விழாவில், தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவை பிரதிநித்துவப்படுத்திய பெண்கள் கால்பந்து அணி மற்றும் பெண்கள் எல்லே அணி ஆகிய இரண்டும் முதல் இடங்களை…

வெள்ளிவிழா..!

நூற்றுக்குப் பின் ஓர் ஊற்றுவரலாறு படைக்கும் மக்கொனை அஹதிய்யா அறநெறிப் பாடசாலையின் 25ஆவது ஆண்டு நிறைவான ‘வெள்ளிவிழாவை” உத்தியோகபூர்வமாக 2026-06-28ஆந் திகித ஞாயிற்றுக் கிழமை பி.ப. 2.00 மணி முதல் மாலை 6.30 வரை மக்கொனை அல்ஹஸனியா மஹா வித்தியாலய பிரதான…

மடி கணனி அன்பளிப்பு..!

பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 22ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் (13-06-2026) இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்…

கவிதை நூல் வெளியீட்டு விழா..!

மழையும் மலையும் தேநீரோடு’ கவிதை நூல் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது மஸ்கெலியா பெரிய மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்தவரும், மொக்கா வின்னர்ஸ் கல்லூரியின் ஆசிரியருமான கவிஞர் கோபால் பிரேம்குமார் அவர்களின் ‘மழையும் மலையும் தேநீரோடு’ கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில்…